இந்திய வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வாலுக்கு வழங்கப்பட்ட உலகக் கோப்பை தொடர் நாயகள் டிராபி இரண்டு துண்டுகளாக உடைந்துள்ளது.
தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்று முடிந்த 19 வயதிற்கு உட்பட்டோருக்கான உலகக் கோப்பை தொடரின் இறுதிப்போட்டியில் இந்தியாவை வீழ்த்தி வங்கதேச அணி முதன் முறையாக கோப்பை கைப்பற்றியது.
இத்தொடரில் 4 அரைசதம் மற்றும் 1 சதம் என 400 ஓட்டங்கள் குவித்த இந்திய அணியின் ஆரம்ப துடுப்பாட்டகாரர் யஷஸ்வி ஜெய்ஸ்வாலுக்கு உலகக் கோப்பை தொடர் நாயகன் டிராபி வழங்கப்பட்டது.
இதனையடுத்து, சமீபத்தில் தென் ஆப்பரிக்காவில் இருந்து இந்திய அணி நாடு திரும்பியது. இந்த பயணத்தின் போது ஜெய்ஸ்வாலுக்கு வழங்கப்பட்ட டிராபி இரண்டு துண்டுகளாக உடைந்துள்ளது.
இது குறித்து ஜெய்ஸ்வாலுக்கு நெருங்கிய வட்டாரம் கூறியதாவது, உலகக் கோப்பை தொடர் நாயகன் டிராபி போக்குவரத்தின் போது சேதமடைந்தது. ஆனால் இப்போது நாங்கள் அதை சரிசெய்துள்ளோம். பயணத்தின் போது இதுபோன்ற விஷயங்கள் நடப்பது சகஜம் என தெரிவித்துள்ளனர்.
அது எப்படி நடந்தது என ஜெய்ஸ்வாலுக்கு தெரியவில்லை, ஆனால் மிக முக்கியமாக, அவர் வருத்தப்படவில்லை என அவரது பயிற்சியாளர் ஜெவாலா சிங் கூறினார்.
இது முதல் முறை அல்ல, அவர் ஓட்டங்களைப் பற்றி அதிகம் அக்கறை காட்டுகிறார், கோப்பைகளைப் பற்றி அதிகம் கவலைப்படுவதில்லை என ஜெவாலா சிங் குறிப்பிட்டுள்ளார்.