காதலனுடன் சென்ற பெண் சடலமாக திரும்பிய சோகம்!

தமிழகத்தில் காதலனுடன் பிறந்தநாள் கொண்டாட செய்த இளம்பெண் விபத்தில் சிக்கி உயிரிழந்த சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

சேலம் மாவட்டத்தின் கே.கே.நகரை சேர்ந்த ரவினாய் குமார் என்பவரின் மகள் ஆர்த்தி, தனியார் கல்லூரியில் 2ம் ஆண்டு படித்து வருகிறார்.

இவரும் திருவண்ணாமலையை சேர்ந்த அசோக் என்பவரும் காதலித்து வந்தனர், நேற்று ஆர்த்திக்கு பிறந்தநாள் என்பவர் அதை பெங்களூருவில் கொண்டாட அசோக் முடிவு செய்தார்.

இதன்படி மோட்டார் சைக்களில் சேலம் வந்த அசோக், ஆர்த்தியை அழைத்து கொண்டு பெங்களூருவுக்கு விரைந்துள்ளார்.

பூசாரிப்பட்டியில் உள்ள தீவட்டிப்பட்டி பொலிஸ் நிலையம் எதிரே சென்ற போது, திடீரென மற்றொரு மோட்டார் சைக்கிள் மீது மோதியதில் இருவரும் தூக்கி வீசப்பட்டனர்.

அந்த சமயத்தில் பின்னால் வந்த டிப்பர் லாரியின் சக்கரத்தில் சிக்கி ஆர்த்தி துடிதுடித்து பரிதாபமாக இறந்தார். இந்த விபத்தில் அசோக் லேசான காயங்களுடன் உயிர் தப்பினார்.

இந்த சம்பவம் குறித்து தீவட்டிப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.