நடிகை மீரா ஜெஸ்மின் மாதவன் நடிப்பில் கடந்த 2002 ஆம் ஆண்டு வெளியான ‘ரன்’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.
இவருடைய முழு பெயர் ஜெஸ்மின் மேரி ஜோசப். மீரா ஜெஸ்மின் சிறு வயதில் இருந்தே மருத்துவர் ஆக வேண்டும் என கனவுகண்டு வந்தவர்.
ஆனால், திசை மாறி சினிமாவிற்குள் வந்தது விட்டார். பள்ளியில் கூட ஸ்டேஜில் ஏறாத மீரா ஜெஸ்மினுக்கு அந்த வாய்ப்பு அதிர்ச்சியாக இருந்தது.
அதன் பின்னர் தமிழில் ரன், புதிய கீதை, ஆஞ்சநேயா, மற்றும் மணிரத்னம் இயக்கிய ஆயுத எழுத்து, மெர்குரிப் பூக்கள், பரட்டை என்ற அழகுசுந்தரம், என பல படங்களில் நடித்து புகழின் உச்சத்தினை தொட்டு சென்றவர்.
கடந்த 2014ஆம் ஆண்டு தனது 32 வயதில் துபாயை சேர்ந்த அனில் ஜான் டைட்டசை திருமண செய்துகொண்டு செட்டில் ஆகிவிட்டார். திருமணத்திற்கு பின்னர் உடல் எடை அதிகரித்து இருந்தது.
அவரின் கடுமையான முயற்சியினால் எடையை குறைத்து பழைய நிலைக்கு திரும்பினர். இந்நிலையில், அவர் நேற்றைய தினம் பிறந்தநாளை கொண்டாடியுள்ளார். அவருக்கு ரசிகர்கள் அனைவரும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.