யூடியூப், டிக்டாக் வீடியோ உருவாக்குபவர்களுக்காக கூகுளின் புதிய டூல்

இணைய ஜாம்பவான் ஆன கூகுள் நிறுவனம் புதிய வீடியோ டூல் ஒன்றினை அறிமுகம் செய்துள்ளது.

செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தினைக் கொண்ட இந்த டூல் ஆனது உருவங்களை தானாக இனங் கண்டு செயற்படக்கூடியதாகவும், வீடியோத் தொழில்நுட்பங்களை கண்டறியக்கூடியதாகவும் இருக்கின்றது.

இப் புதிய டூல் ஆனது AutoFlip என அழைக்கப்படுகின்றது.

இது வீடியோ உள்ளடக்கத்தினை பகுப்பாய்வு செய்து தேவையான அளவிற்கு Crop செய்கின்றது.

யூடியூப் மற்றும் டிக்டாக் என்பவற்றிற்காக வீடியோக்களை உருவாக்குபவர்களுக்கு இந்த டூல் பெரும் உதவியாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.