முன்னணி சமூகவலைத்தளங்களுள் ஒன்றான டுவிட்டர் நேற்றைய தினம் சில மணி நேரம் ஸ்தம்பிதம் அடைந்துள்ளது.
இதனால் பயனர்கள் போஸ்ட்களை லைக் செய்யவோ அல்லது ரீடுவீட் செய்யவோ முடியாத நிலை காணப்பட்டுள்ளது.
எனினும் இந்த ஸ்தம்பிதம் ஆனது இந்தியாவில் மாத்திரம் இடம்பெற்றுள்ளது.
இதனை Downdetector உறுதிப்படுத்தியுள்ளது.
இந்திய நேரம் மாலை 2 மணிமுதல் இவ்வாறு டுவிட்டர் ஸ்தம்பிதம் அடைந்துள்ளது.
இது தொடர்பாக சில அன்ரோயிட் பயனர்கள் புகார் தெரிவித்தும் உள்ளனர்.
அத்துடன் டுவிட்டரை பயன்பத்த முனையும்போது “tweets aren’t loading right now. Please tap to retry” எனும் செய்தி காண்பிக்கப்பட்டுள்ளது.
எவ்வாறெனினும் பின்னர் டுவிட்டர் வழமைக்கு திரும்பியுள்ளமை குறிப்பிடத்தக்கது.