வளைந்த திரை, 3D கிளாஸ் கொண்ட ஸ்மார்ட் கடிகாரத்தினை அறிமுகம் செய்யும் Oppo

ஆப்பிள், சாம்சுங் உட்பட பல முன்னணி இலத்திரனியல் சாதன வடிவமைப்பு நிறுவனங்கள் ஸ்மார்ட் கடிகாரங்களை அறிமுகம் செய்து வருகின்றன.

இவற்றில் Oppo நிறுவனம் வழமைக்கு மாறாக சற்று வித்தியாசமான ஸ்மார்ட் கடிகாரத்தினை அறிமுகம் செய்யவுள்ளது.

அதாவது வளைந்த திரை மற்றும் 3D கிளாஸ் கொண்ட கடிகாரத்தினை அறிமுகம் செய்யவுள்ளது.

இதற்கான அறிமுகம் நடைபெறவிருந்த மொபைல் வேர்ள்ட் காங்கிரஸ் நிகழ்வில் இடம் பெறவிருந்தது.

எனினும் கொரோனா வைரஸ் தாக்கத்தினை அடுத்து அந்நிகழ்வு கைவிடப்பட்டது.

எவ்வாறெனினும் எதிர்வரும் மார்ச் மாதம் குறித்த கடிகாரத்தினை விற்பனைக்காக Oppo நிறுவனம் அறிமுகம் செய்யவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.