நீங்களும் தேவதையாய் ஜொலிக்க வேண்டுமா?

சருமத்தை அழகாக்க செயற்கை வழிமுறைகளை விட ஏராளமான இயற்கை வழிமுறைகள் இன்று உள்ளன.

இதில் பழங்களுக்கு முக்கிய பங்கே உள்ளது. இயற்கையாக கிடைக்கும் பழங்கள் நமது முகத்தை மட்டுமின்றி சருமத்தையை பொழிவுறச் செய்கின்றது.

அதில் செர்ரி பழங்கள் ஆரோக்கியத்திற்கு மட்டுமின்றி சரும அழகிற்கு பெரிதும் உதவியாக இருக்கின்றது.

அந்தவகையில் தற்போது செர்ரி பழங்களை வைத்து எப்படி சரும அழகிற்கு பயன்படுத்தலாம் என அங்கு பார்ப்போம்.

  • முகத்தை நன்றாக கழுவிய பின்னர் அரைத்த செர்ரி பழங்களை முகத்தில் தடவினால் சருமம் மென்மையாகவும் பளிச்சென்றும் மாறும். உங்களது சருமம் எண்ணெய் பசை நிறைந்ததாக இருந்தால் காய்ந்த செர்ரி பழங்களை பயன்படுத்த வேண்டும்.
  • செர்ரி பழங்களை நன்றாக அரைத்து அதனுடன் தேன் மற்றும் சில துளிகள் எலுமிச்சை சாறு கலந்து முகத்தில் தடவி 30 நிமிடம் கழித்து முகத்தை குளிர்ந்த நீரினால் கழுவினால் சருமத்தில் ஏற்படும் அரிப்பு பிரச்சனையை தடுக்கலாம்.
  • தேன் மற்றும் செர்ரி பழம் கலந்த கலவையை முகத்தில் பயன்படுத்தி 30 நிமிடம் கழித்து முகத்தை வெதுவெதுப்பான நீரினால் கழுவினால் சருமத்தில் ஏற்பட்ட கருமை மற்றும் சுருக்கம் மறையும்.
  • ஆலிவ் எண்ணெயை அரைத்த செர்ரி பழங்களுடன் சேர்த்து முகத்தில் பயன்படுத்தினால் வறட்சியான சருமத்தை நீக்கி எப்போதும் ஈரப்பதமாக வைத்திருக்க முடியும்.
  • முட்டையின் வெள்ளைக்கரு தேன் மற்றும் செர்ரி பழங்களை ஒன்றாக சேர்த்து முகத்தில் தடவி காய்ந்ததும் வெது வெதுப்பான நீரினால் கழுவினால் சருமம் பளிச்சென்று மாறும்.