நடிகர் சிவகார்த்திகேயன் சமீபத்தில் தனது 35-வது பிறந்தநாளைக் கொண்டாடினார். ஆரம்பத்தில் மிகவும் கஷ்டப்பட்ட இவர் தற்போது சொந்தமாக தயாரிப்பு நிறுவனத்தினையும் நடத்தி வருகின்றார்.
மெரினா படத்தின் மூலம் அறிமுகமான இவர், கனா, நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா போன்ற படங்களை தயாரித்து அசத்தினார்.
சமீபத்தில் பிறந்தநாளைக் கொண்டாடிய இவர் தனது மனைவி ஆர்த்தி மற்றும் குழந்தை ஆராதனா குறித்து பல விடயங்களைக் கூறியுள்ளார்.
ஆர்த்தி இவருக்கு தாய்மாமன் மகள் என்றும் வசதியான வீட்டுப்பெண்ணாக இருந்தாலும் வெளியில் காட்டிக்கொள்ள மாட்டார் என்று தான் திருமணம் செய்யும் போது அவருக்கு வயது 21 தான் என்று தற்போது குழந்தையின் வளர்ப்பு முதல் எனது வருமான வரி கணக்கு வரை எல்லாம் அவர் தான் பார்க்கின்றார் என்று தெரிவித்துள்ளார்.
அதுமட்டுமின்றி சமையலில் அசைவமான மட்டன் சிக்கன் இவற்றினை அசத்தலாக சமைக்கும் ஆர்த்தி கர்ப்பமாக இருக்கும் தருணத்தில் நான் அவரை விவாகரத்து செய்யப்போகிறேன் என்ற தகவல் வெளியானது.
இதனை அவரிடமிருந்து மறைத்தேன். ஆனால் மறுநாளே அவளே தெரிந்துகொண்டு திரைத்துறையில் இருந்தால் இதெல்லாம் சாதாரணமாக வரும் என்றும் பார்த்துக்கொள்ளலாம் என்றும் ஆறுதல் அளித்தார். மனைவி குழந்தையினை பார்க்காமல் இருக்க முடியாததால் நான் எங்கு வெளியே சென்றாலும் அவர்களையும் அழைத்துச்சென்றுவிடுவேன் என்று கூறியுள்ளார்.