பாலிவுட் படங்களில் அறிமுகமாகி பல மொழி படங்களில் நடித்து பின் தமிழில் இயக்குனர் கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் வெளியான ‘வாரணம் ஆயிரம்’ படத்தில் நடித்து தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார்.
இதன்பின் நடிகர் அஜித்துடன் ’அசல்’ மற்றும் நடிகர் விஷாலுடன் ’வெடி’, வேட்டை போன்ற படங்களில் நடித்து பிரபலமானார். கடந்த வருடம் ஜுலை மாதம் இவருக்கு இரண்டாம் குழந்தை பிறந்துள்ளது.
முதல் குழந்தை பெற்றது உடல் எடை அதிகரித்தது போல் இரண்டாம் குழந்தை பிறந்து தற்போது ஒரு வருடம் கூட ஆகவில்லை. இதனால் அவர் 89 கிலோவாக உடல் பருமனை அதிகரித்துள்ளார்.
இதனால் சமீரா ரெட்டி அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 89 கிலோ எடைக்கு ஏற்ற வகையில் டைட்டான ஆடையணிந்து கவர்ச்சியாக போஸ் கொடுத்துள்ளார். அதில் என் குழந்தைகளுக்காக இதையும் சமாளிப்பேன் என்று கூறி பதிவிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் ஷாக்காகி கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.