திரைத்துறை என்றாலே பல விமர்சனங்களை சந்தித்து பிரச்சனைகளில் சிக்கிவது வழக்கம் தான். அதிலும் வதந்திகளால் ஊடகங்களுக்கு பதில் சொல்லவே பெரும் வேலையாக இருக்கும். அந்த வகையில் பாதிக்கப்பட்டவர் தான் நடிகை அமலா பால்.
மைனா படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமாகி தற்போது ஆடை படம் வரை நடித்து பிரபலமானவர் நடிகை அமலாபால். தான் காதலித்து திருமணம் செய்து கொண்ட இயக்குநர் ஏ.எல்.விஜய்யை சில காரணங்களால் விவாகரத்து பெற்று தனியாக வாழ்ந்து வருகிறார். இருவரின் விவாகரத்திற்கு பல்வேறு காரணங்கள் சொல்லப்பட்டது.
அவரது தந்தை ஏ.எல். அழகப்பன், விஜய் மற்றும் அமலாபால் விவாகரத்திற்கு நடிகர் தனுஷ் தான் காரணம் என்று கூறி சர்ச்சையை ஏற்படுத்தினார். இதற்கு அமலாபால் நடித்து வெளியாகவுள்ள அதோ அந்த பறவை போல என்ற படத்தின் ப்ரோமோஷனிற்காக அளித்த பேட்டியொன்றில் விவரமாக கூறியுள்ளார்.
தனுஷ் என்னுடைய நலம் விரும்பி. என்னுடையை முழு தனிப்பட்ட முடிவுதான் என்னுடைய விவாகரத்து. இதற்கு யாரும் பொருப்பில்லை என்று கூறினார். மேலும் இரண்டாம் திருமணம் குறித்த செய்தியை நானே கூறுவேன் என்றும் கூறியுள்ளார்.