பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சீரியல் தெய்வமகள் தொடரில் சத்யாவாக அனைவரின் மனதிலும் பதிந்திருப்பார். குறிப்பாக அவரது கதாபாத்திரம் பெண்கள் மனதில் நன்றாக இடம் பிடித்துவிட்டது என்று சொல்லலாம்.
மேலும், இவருக்கென தனியாக சமூக வலைதளங்களில் ஒரு ரசிகர் கூட்டமே இருக்கிறது. அந்த வகையில் கடந்த வாரம் வெளியான ‘ஓ மை கடவுள்’ என்ற படத்தின் மூலம் சினிமாவில் நடிகையாக களமிறங்கினார்.
இந்த நிலையில் அவர் வெளிப்படையாக சில விஷயங்களை பேசி இருக்கிறார். அவர் பேசியபோது சினிமாவில் பட வாய்ப்புகள் பல வருகின்றது. நல்ல கதைக்காக காத்திருக்கிறேன் என்று கூறினார்.
பின்னர் முதலில் ‘ஓ மை கடவுளே’ என்னும் படத்திற்கு தான் ஓகே சொன்னேன். அதற்கு முன்னதாகவே இரண்டாவதாக தெலுங்கில் நான் நடித்த படம் வெளியாகி உள்ளது.
தற்போது நடிகர் விதார்த் உடன் இணைந்து நடித்து வருகிறேன். மேலும் சினிமா படம் இயக்கும் ஆசை என்னிடம் உள்ளது. அதில் எனது தாயின் கதையை படமாக்க நினைக்கிறேன். என் தாயின் உழைப்பும் தியாகமும் தான் என் வாழ்வில் எனக்கு ரோல் மாடலாக இருந்தது.
எனவே இப்படத்தை இயக்க விரும்புகிறேன். மேலும் தயாரிப்பாளர்கள் கிடைக்கவில்லை என்றால் அந்த படத்தை தானே தயாரிக்கவும் தயாராக உள்ளேன் என்று தெரிவித்துள்ளார்.