இந்தியன் 2 விபத்து நடந்த இடத்தில் இதுவரை எத்தனை உயிர்கள் போயுள்ளது தெரியுமா?

இந்தியன் 2 படப்பிடிப்பு தளத்தில் நடந்த விபத்து யாராலும் மறக்கமுடியாத ஒன்று. ராட்சத கிரேன் அறுந்து விழுந்து மூன்று பேர் உடல் நசுங்கி உயிரழந்த சம்பவம் படக்குழுவை தாண்டி ஒட்டு மொத்த தமிழ் சினிமா உலகினரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

இதில் மது, ஸ்ரீ கிருஷ்னன், சந்திரன் என்பவர்கள் மரணம் அடைந்தார்கள், 9 நபர்கள் படுகாயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்க பட்டுள்ளார்கள்.

இந்நிலையில் இந்த சூட்டிங் ஸ்பாட்டில் ஏற்கனவே பல மரணங்கள் நிகழ்ந்துள்ள சம்பவம் பீதியை தற்போது கிளப்பி வருகிறது.

அதில், EVP ப்லிம் சிட்டியில் நடந்தவிபத்து ஒன்றும் அங்கு நடந்த முதல் விபத்து அல்ல இங்கே ஏற்கனவே பிகில் , பிக்பாஸ் உட்பட பலமரணங்கள் நடந்துள்ளன.

முன்னதாக இந்த இடம் பொழுதுபோக்கு பூங்காவாக இருந்தது. இது அரசு ஆக்கிரமிப்புநிலத்தில் உள்ளது என்று எழுந்த புகாரை தொடர்ந்து இது படப்பிடிப்பு தளமாக மாற்றப்பட்டது.

கடந்த 2012 ல் இந்த இடத்தில் இளம் பெண் ஒருவர் ராட்டினத்தில் இருந்து விழுந்து கால் முறிவு ஏற்பட்டது. தொடர்ந்து செப்டம்பரில் தண்டையார் பேட்டை சேர்ந்த சிறுவன் சறுக்கு விளையாட்டில் தவறி விழுந்து உயிர் தப்பியுள்ளான்.

அதே போல 2012 ல் அக்டோபர் மாதம் நாகலாந்தை சேர்ந்த அபியே மேக் என்ற விமான பணிப்பெண் ஆக்டோபஸ் ராட்டினத்தில் தவறி விழுந்து இறந்ததும் இதே இடத்தில் தான்.

இது போன்ற சம்பவங்களால் படப்பிடிப்பு தளமாக்கப்பட்ட இந்த இடத்தில் தனியார் டிவி சானல் நடத்திய நிகழ்ச்சியில் இரண்டு பெண்கள் தற்கொலை முயற்சியும் செய்துள்ளனர்.

மேலும் ரஜினியின் காலா படப்பிடிப்பின் போதும் இதே இடத்தில் வட மாநில இளைஞர் மின்சாரம் தாக்கில் பலியானார். மற்றொருவர் கீழே விழுந்து இறந்தார்.

அதே போல், விஜய்யின் பிகில் படத்தின் போதும் கிரேன் அறுந்து விழுந்து செல்வராஜ் என்பவர் இறந்து போன சம்பவமும் இதே இடத்தில் தான் நடைபெற்றுள்ளது.

பிக்பாஸ் சீசன் 2 சமயத்தில் அரியலூரை சேர்ந்த ஏசி மெக்கானிக் குணசேகரன் என்பவர் இதே இடத்தில் விபத்தில் காலமானார். இப்படி தொடர்சியாக இந்த இடத்தில் உயிர் பலிகள் நடைபெற்றுக்கொண்டிருப்பது பல விதமான மக்களுக்கு அதிர்ச்சியை கிளப்பியிருக்கிறது.