தற்போது மடிக்கக்கூடிய திரைகளைக் கொண்ட ஸ்மார்ட் கைப்பேசிகளின் வரவு மக்கள் மத்தியில் பிரபலமாகிக்கொண்டு செல்கின்றது.
இந்நிலையில் சீனாவின் முன்னணி ஸ்மார்ட் கைப்பேசி வடிவமைப்பு நிறுவனமான TCL கைப்பேசி திரைகளில் புதிய தொழில்நுட்பம் ஒன்றினை கொண்டுவரவுள்ளது.
இதன்படி ஸ்லைட் தொழில்நுட்பம் உள்ளடக்கப்படவுள்ளது.
அதாவது கைப்பேசியின் பிரேமில் இருந்து திரையினை நகர்த்தி பயன்படுத்திக்கொள்ள முடியும்.
இது தொடர்பான அறிவிப்பினை நடைபெறவிருந்த மொபைல் வேர்ள்ட் கொங்கிரஸ் நிகழ்வில் வெளியிடுவதற்கு TCL நிறுவனம் எதிர்பார்த்திருந்தது.
எனினும் இறுதியில் குறித்த நிகழ்வு கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக கைவிடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.