முன்னணி சமூக வலைத்தளமாக பேஸ்புக் ஆனது இந்தியாவில் கல்வித்துறையில் முதலீடு ஒன்றினை மேற்கொள்ளவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதன்படி Unacademy எனும் திட்டத்தில் தனது முதலீட்டினை மேற்கொள்கின்றது.
Unacademy எனப்படுவது இந்தியாவில் மிக வேகமாக வளர்ந்து வரும் ஒரு கல்வித்துறை தொழில்நுட்ப நிறுவனமாகும்.
இதற்காக சுமார் 110 மில்லியன் டொலர்கள ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பேஸ்புக் நிறுவனம் இந்தியாவில் மேற்கொள்ளும் இரண்டாவது முதலீடாக இது காணப்படுகின்றது.
இதற்கு முன்னர் கடந்த வருடம் Meesho எனும் திட்டத்தில் முதலீட்டினை மேற்கொண்டிருந்தது.