காற்றிலிருந்து மின்சாரத்தை உற்பத்தி செய்யக்கூடிய மற்றுமொரு முறை கண்டுபிடிப்பு

தற்போது காற்றிலிருந்து பாரிய காற்றாலைகள் மூலம் மின்சாரத்தை உற்பத்தி செய்யும் முறை பல்வேறு நாடுகளிலும் காணப்படுகின்றது.

இந்நிலையில் தற்போது காற்றிலிருந்து மின்னை உற்பத்தி செய்யக்கூடிய மற்றுமொரு முறையை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

இதற்காக விசேட சாதனம் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது.

இச் சாதனத்தின் உதவியுடன் இயற்கையான பக்டீரியாக்கள் காற்றலிருக்கும் ஈரப்பதனை பயன்படுத்தி மின்சாரத்தினை உற்பத்தி செய்கின்றது.

இது ஒரு புதுப்பிக்கக்கூடிய சக்திவளமாகவும் காணப்படுகின்றது.

குறித்த சாதனத்திற்கு Air-gen என ஆராய்ச்சியாளர்கள் பெயரிட்டுள்ளனர்.

மேலும் இச் சாதனத்தினை அமெரிக்காவின் Massachusetts பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்களே உருவாக்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.