ஹோட்டலில் தங்கியதற்கு பில் கூட காட்டாமல் கிளம்பிய பட்டாஸ் பட நடிகை..!!

அஸ்வந்தாமா என்ற தெலுங்கு படத்தில் ஹீரோயினாக நடித்துள்ளார் நடிகை மெஹரீன் பிர்சாடா. சென்ற மாதம் வெளியான பட்டாஸ் படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடித்தவர் தான் இந்த நடிகை.

அவர் அஸ்வந்தாமா படத்தின் விளம்பரத்திற்காக ஒரு பேட்டி கொடுக்கவேண்டும் என தயாரிப்பாளர் அழைத்துள்ளார்.

ஆனால் நடிகை ஹோட்டலில் இருந்துகொண்டு தனக்கு skin பிரச்சனை இருப்பதாக கூறி தற்போது வரமுடியாது என போனில் கூறிவிட்டாராம். அதனால் கோபமான தயாரிப்பாளர் ‘நீங்கள் இப்போது வரவில்லை என்றால் நான் உங்கள் ஹோட்டல் பில் செட்டில் பண்ண மாட்டேன்’ என பதில் கூறினாராம்.

அதனால் கோபமான நடிகை மெஹரீன் ஹோட்டலில் இருந்து எதுவும் சொல்லாமல் கிளம்பி சென்றுவிட்டாராம். அதன்பின் ஹோட்டல் நிர்வாக தயாரிப்பாளரிடம் பிரச்சனை செய்து தான் நடிகை தங்கியதற்கு கட்ட வேண்டிய பில் தொகையை வாங்கியிருக்கிறார்கள்.