தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் தொடர்களுக்கு எதிராக பிரபல தயாரிப்பாளர் கேயார் நீதி மன்றத்தை அணுக உள்ளது திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆம் தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் சீரியல்களின் தலைப்புகள் ஏற்னவே படங்களில் வைக்கப்பட்ட தலைப்பு தான். அந்த தலைப்புகள் மக்களிடம் ஏற்கனவே சென்றுவிட்டதனால் அதுவும் ஒருவகையில் அந்த தொடரை கவனிக்க வைக்கிறது என்று கேயார் தெரிவித்துள்ளார்.
இதனை தொடர்பாக இவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் “சின்னத்திரையில் ஒளிபரப்பாகும் தொடரினால் ஏற்கனவே சினிமா பாதிக்கப்பட்டுள்ளது. அதை போலவே சீரியல்களில் படத்தின் தலைப்புகள் வைப்பதும் வழக்கமாகிவிட்டது. ஒரு படத்திற்கு மிக முக்கியமான விஷயம் தலைப்பு தான். அப்படத்தில் பணிபுரியும் அணைந்து கலைஞர்களுக்கும் தலைப்பு தான் அங்கீகாரம். ஆனால் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படும் தொடர்களில் சர்வ சாதாரணமாக அந்த தலைப்புகளை பயன்படுத்தி விடுகிறார்கள்” என்று கூறினார்.
மேலும் “ஏன், என் படங்களான பூவே பூச்சூடவா, ஈரமான ரோஜாவே, இரட்டை ரோஜா என்ற தலைப்புகளை இதனை போன்ற தொடர்களுக்கு பயன் படுத்தியுளார்கள். இது சம்மதமாக எந்த ஒரு அணுமைதியும் யாரிடமும் பெறுவதும் இல்லை. ஒரு தலைப்பை கூட சுயமாக சிந்திக்கவும் தெரியவில்லை என்பது மிகவும் வேதனையாக இருக்கிறது. ஆகவே சினிமாவை போல் தொடர்களுக்கும் தணிக்கை ஒன்று இருந்தால் இப்படிப்பட்ட விஷங்களை நாம் தவிர்க்கலாம். இதை தொடர்பாக நான் சட்டப்படி நீதி மன்றத்தை அணுக உள்ளேன் என்று தெரிவித்துள்ளார் தயாரிப்பாளர் கேயார்.