ஆன்லைன் காதலனால் பெண்ணிற்கு ஏற்பட்ட துயரம்!!

பானு என்ற பெண் திருமணத்திற்காக தன்னுடைய 42 வயதில் மாப்பிள்ளை தேடி வந்துள்ளார். அப்பொழுது அவருக்கு அறுவை சிகிச்சை நிபுணரான ஆண்ட்ரூவின் தொடர்பு கிடைத்துள்ளது. இன்ஸ்டாகிராம் மூலம் வாட்ஸ்அப் நம்பரை பகிர்ந்துகொண்ட இருவரும் நன்றாக பழகி வந்துள்ளனர்.

ஆண்ட்ரூ பானுவிற்கு புத்தாண்டு பரிசு அனுப்பி இருப்பதாக தெரிவித்துள்ளார். அதன் பின்னர் பானுவிற்கு சர்வதேச அழைப்புகள் வந்துள்ளது. பானுவிற்கு வந்த பொருள் டெல்லி இந்திரா காந்தி விமான நிலையத்தில் மாட்டிக் கொண்டதாக ஒரு போன் வந்துள்ளது. அதனை விடுவிக்க வேண்டுமென்றால் நீங்கள் பணம் செலுத்த வேண்டும் என்று தெரிவித்துள்ளனர்.

பானுவிற்கு வந்த பரிசில் கோடிக்கணக்கான வெளிநாட்டு பணம் இருப்பதாக அவர்கள் தெரிவித்திருக்கின்றனர். எனவே, அதனை இந்திய பணமாக மாற்ற வேண்டும் என்றால் வரி செலுத்த வேண்டும் என தெரிவித்துள்ளனர். இதனை தொடர்ந்து தன்னுடைய மேனேஜரிடம் அவர் கேட்ட தொகையை அனுப்புமாறு தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து பணம் கேட்டு கொண்டே அழைப்புகள் வந்து கொண்டே இருந்தது.ஆனால் பரிசு மட்டும் வரவில்லை. தான் ஏமாற்றப்பட்டது பானுவிற்கு தெரியவந்துள்ளது. அதன் பின்னர் அவர் சைபர் கிரைம் பிரிவில் புகார் அளித்துள்ளார். ஏமாற்றியவரின் கணக்குகளை உடனடியாக முடக்குமாறு சிஐடி சம்பந்தப்பட்ட வங்கிகளுக்கு கடிதம் எழுதி இருக்கின்றது.