கள்ளக்காதலனுடன் தாய்.. வீடியோ காலில் தந்தை.! அரங்கேறிய லீலை…..

திருநெல்வேலியில் ஒருவர் தங்களுடைய கள்ளக்காதலைகாட்டிக்கொடுத்த குழந்தையை கொடூரமாக தாக்கி கொலை செய்து இருக்கின்றார்.

விக்ரமசிங்கபுரம் அருகே இருக்கும் டானா என்ற பகுதியைச் சேர்ந்த அந்தோணி பிரகாஷ், தீபா என்ற பெண்ணை கடந்த 2014ம் ஆண்டு திருமணம் செய்து இருக்கின்றார். இவர்களுக்கு 4 வயதில் லோகேஷ் என்ற மகன் இருக்கின்றார். அந்தோணி லாரி ஓட்டுனராக பணிபுரிவதால் அடிக்கடி வெளியூருக்கு சென்று வரும் பழக்கம் கொண்டவர்.

இந்நிலையில், தீபாவுக்கு சொரிமுத்து என்ற நபரோடு பழக்கம் ஏற்பட்டு கள்ளக்காதலாக மாறி இருக்கின்றது. இது குறித்து அந்தோணி அவருடைய மனைவியிடம் கேட்காமல் தற்கொலை முயற்சி செய்துள்ளார். ஆனால், அவரை காப்பாற்றி விட்டனர். இருப்பினும் தன்னுடைய கள்ளக்காதல் பழக்கத்தை நிறுத்த வில்லை.

இந்நிலையில் கடந்த 20ஆம் தேதி சிவராத்திரியை முன்னிட்டு தன்னுடைய கணவர் வெளியே சென்றிருந்த பொழுது சொரிமுத்துவையும் குழந்தையையும் அழைத்துக்கொண்டு தீபா கோவிலுக்கு சென்றுள்ளார். அப்பொழுது அந்தோணி மனைவிக்கு கால் செய்ய குழந்தையின் கையில் செல்போன் இருந்ததால் அதை எடுத்து லோகேஷ் பேசி இருக்கின்றான்.

அப்போது தாய் சொரிமுத்து உடன் இருப்பதை தெரிவித்து, வீடியோ கால் செய்து சொரிமுத்துவை வீடியோ காலில் லோகேஷ் காட்டியுள்ளான். இதனால், சொரிமுத்து மாட்டிக்கொண்ட ஆத்திரத்தில் குழந்தையை கொடூரமாக தாக்கி இருக்கின்றார். மயக்கமடைந்த லோகேஷினை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்ற பொழுது அவர் முன்னதாகவே இறந்து விட்டார் என்று மருத்துவர்கள் தெரிவித்திருக்கின்றனர்.