பானா காத்தாடி திரைப்படத்தின் மூலம் 2018ல் தமிழ் சினிமாவில் காலடி வைத்தவர் நடிகை சமந்தா, அதன் பின்னர் நீதானே என் பொன்வசந்தம், நான் ஈ, கத்தி, 24 , மெர்சல் மற்றும் சூப்பர்டீலக்ஸ் போன்ற படங்களில் நடித்து தன்னுடைய திறமையான நடிப்பை வெளிப்படுத்தி தமிழ் மக்களின் மனதில் கனவுக்கன்னியாக சிம்மாசனம் போட்டு அமர்ந்து உள்ளார்.
சமந்தா தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கு படங்களிலும் முன்னணி கதாநாயகியாக திகழ்ந்து வருகின்றார். அவர் இதுவரை 20க்கும் மேற்பட்ட அவார்டுகளை பெற்றிருக்கின்றார். நாகசைதன்யா திருமணம் செய்துகொண்ட சமந்தா அவருடைய திருமணத்திற்கு பின்னரும் தொடர்ந்து நடித்து வருகின்றார்.
இந்நிலையில் சமீபத்தில் அவர் இணையத்தில் வெளியிட புகைப்படங்கள் மிகவும் விமர்சனத்துக்கு ஆளாகி வருகின்றது.
இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் பலரும் திருமணம் ஆகிவிட்டது, இன்னும் இது போன்ற ஆடைகள் அணிய தான் வேண்டுமா? என்று கமெண்ட் செய்து அவருக்கு அறிவுரை வழங்குகின்றனர்.