விளக்கெண்ணெய் நம் முன்னோர்கள் காலத்தில் இருந்தே பயன்பட்டு வரும் ஒரு மூலிகையில் ஒன்றாகும். இதில் இல்லாத நன்மைகளே இல்லை எனலாம்.
நம்முடைய முன்னோர்கள் விளக்கெண்ணையை பல உடல் நலப் பிரச்சனைகளுக்கான தீர்வாகப் பயன்படுத்துகிறார்கள்.
அதிலும் உடலைச் சுத்தம் செய்வதற்கும், உடல் சூட்டைத் தணிப்பதற்கும் முதல் கருவியாக விளக்கெண்ணெயைத் தான் பயன்படுத்தியிருக்கிறார்கள்.
அதுமட்டுமின்றி இதை அழகு சாதனப் பொருட்கள், ஷாம்பு, கண்களுக்கு மருந்தாக விளக்கெண்ணெய்யை பயன்படுத்தி வருகின்றனர்.
அந்தவகையில் விளக்கெண்ணெயை குடிக்கலாமா? இதன் நன்மைகள், பக்கவிளைவுகள் என்னென்ன என்பதை அறிந்து கொள்வோம்.
- மலச்சிக்கலை போக்குதல் விளக்கெண்ணெய் ஒரு மலமிளக்கியாக செயல்படுகிறது. இதை 15 மில்லி லிட்டர் (3 டீ ஸ்பூன்) அளவில் குடித்து வந்தால் மலத்தை இலகுவாக்கி தள்ளுகிறது. ஆனால் அதிகமாக குடிக்க வேண்டாம். ஏனெனில் இது குடல் தசைகளை வேகமாக்கி வயிற்றுப் போக்குக்கு வழி வகுத்து விடும். இதை குடித்த 2-3 மணி நேரத்தில் மலம் கழிப்பதில் நல்ல முன்னேற்றம் தெரியும்.
- விளக்கெண்ணெய் குடித்த 24 மணி நேரத்தில் பிரசவ வலி வர வாய்ப்புள்ளது. நாட்கள் தள்ளிப் போகும் இரட்டை குழந்தைகள் பிரசவ வலியைக்கூட தூண்ட உதவுகிறது. விளக்கெண்ணெய் முறையை கடைசி மாதத்தில் (41 வது வாரத்தில்) இருந்து செய்யலாம். இந்த முறையை பின்பற்றுவதற்கு முன் உங்க மகப்பேறு மருத்துவரிடம் ஆலோசனை செய்து கொள்ளுங்கள்.
- அழற்சியால் மூட்டுகளில் ஏற்படும் ஆஸ்டியோஆர்த்ட்ரிட்ஸ் போன்றவற்றை குணப்படுத்துகிறது. மேலும் இதை தினமும் 3 மாத்திரைகள் வீதம் 4 வாரங்களுக்கு பயன்படுத்தி வர வேண்டும். இதன் மூலம் உங்க கீழ்வாத பிரச்சனையில் இருந்து விடுபடலாம்.
- பெண்களின் கருப்பையில் சில சமயங்களில் புற்றுநோய் அல்லாத கருப்பை நார்த்திசுக்கட்டிகளால் மலச்சிக்கல் உருவாகும். இந்த மலச்சிக்கல் பிரச்சனையை விளக்கெண்ணெய் போக்கி விடும். அதே மாதிரி இந்த கட்டிகளால் வயிற்றில் ஏற்படும் வலியை குறைக்க 30 நிமிடங்கள் வயிற்றில் விளக்கெண்ணெய் பேக் வைத்து ஒத்தடம் கொடுக்கலாம். இது அங்கே இரத்த ஓட்டத்தை அதிகரித்து வலியை குறைக்கிறது.
- வெளிமூலம் மற்றும் உள் மூலம் இரண்டுக்குமே விளக்கெண்ணெயால் தீர்வு கிடைக்கும். முதலில் வெளிப்புறத்தில் பயன்படுத்திப் பாருங்கள். உங்களுக்கு திருப்தி ஏற்படும் பட்சத்தில் உட்புறம் எடுத்துக் கொள்ளலாம். உட்புறம் எடுத்துக் கொள்வதாக இருந்தால் நல்ல தரமான, கலப்படம் இல்லாததாகப் பார்த்து வாங்கி பயன்படுத்த வேண்டும்.
- தினமும் காலையில் கண்களை சுற்றி, வாயை சுற்றி, கன்னம், கழுத்து இந்த பகுதிகளில் விளக்கெண்ணெய்யை தடவி 20 நிமிடங்கள் வைத்திருக்க வேண்டும். பிறகு சாதாரண நீரில் கழுவி விடுங்கள். உங்க சருமம் இளமையாக தென்படும்.
- தழும்புகள் மற்றும் பருக்களை மறைய வைக்க உதவுகிறது. ஒரு சுத்தமான காட்டன் துணியை எடுத்து வெதுவெதுப்பான நீரில் முக்கி அதில் இரண்டு துளிகள் விளக்கெண்ணெய் சேர்த்து இரவு தூங்கும் முன் முகத்தில் தடவி கொள்ளுங்கள். பிறகு காலையில் எழுந்ததும் முகத்தை கழுவி விடுங்கள். இப்படியே செய்து வரும் போது, முகத்தழும்புகள் மறைந்து விடும்.
- இரவில் படுப்பதற்கு முன் விளக்கெண்ணெய்யை தடவிக் கொண்டு தூங்குங்கள். கேண்டிடா பூஞ்சை தொற்று, மெலாஸ்மா போன்ற நோய்களை குணப்படுத்துகிறது.
- தினமும் மருக்களின் மீது விளக்கெண்ணெய் தடவி வந்தால் கொஞ்ச நாட்களில் அவை காய்ந்து உதிர்ந்து விடும். மேலும் பூண்டு பல்லை எடுத்து அதையும் மருக்களின் மேல் வைத்து வர உதிர்ந்து விடும்.
பக்க விளைவுகள்
- பெண்கள் தங்கள் கர்ப்ப காலம் முழுவதும் விளக்கெண்ணெய்யை பயன்படுத்துவதை தவிருங்கள். வேண்டும் என்றால் மகப்பேறு மருத்துவரிடம் ஆலோசனை பெற்று விட்டு பயன்படுத்துங்கள்.
- இதில் ரிசின் உள்ளது. எனவே விளக்கெண்ணெய்யை அதிகமாக சாப்பிட்டால் வயிற்று போக்கு, அடிவயிற்று வலி, வாந்தி மற்றும் நெஞ்செரிச்சல் உண்டாகிறது. சிலருக்கு விளக்கெண்ணெய் ஒத்துக் கொள்ளாமல் சரும அழற்சி ஏற்படும்.