நாசாவிருந்து மிகப்பெரிய பரிசு தொகை..!!

அமெரிக்காவின் விண்வெளி ஆய்வு மையமான நாசா மக்கள் மத்தியில் புதிய போட்டி ஒன்றினை அறிவித்துள்ளது.

அதாவது வீனஸ் கிரகத்திற்கு அனுப்பவுள்ள ரோவரிற்கானா சென்சார் ஒன்றினை உருவாக்கம் போட்டியாகும்.

பொருட்களுடன் மோதாமல் பயணிக்கக் கூடிய வகையில் இந்த சென்சார் பயன்படுத்தப்பட உள்ளது.

இதனை உருவாக்குபவர்களுக்கு முதலாவது பரிசாக 15,000 அமெரிக்க டொலர்கள் வழங்கப்பட உள்ளது.

அதுமாத்திரமன்றி இப் போட்டியில் பங்குபெற்றும் முதலாவது ரன்னர் அப் போட்டியாளருக்கு 10,000 அமெரிக்க டொலர்களும் பரிசாக வழங்கப்பட உள்ளது.

மேலும் இந்த சென்சார் ஆனது வீனஸ் கிரகத்தில் உள்ள 448 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையை தாங்கக் கூடியதாக இருக்க வேண்டும்.

எதிர்வரும் மே மாதம் 29ஆம் திகதி வரை இப்போட்டியில் கலந்துகொண்டு சென்சாரினை உருவாக்கி வழங்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.