டி-20 உலகக் கோப்பை: விளையாடிய 2 போட்டியிலும் இலங்கை தோல்வி.. முதல் வெற்றியை பதிவு செய்தது அவுஸ்திரேலிய..!

அவுஸ்திரேலியாவில் நடைபெற்று வரும் மகளிருக்கான டி-20 உலகக் கோப்பை தொடரின் குரூப் சுற்றில் இலங்கை அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி அவுஸ்திரேலிய முதல் வெற்றியை பதிவு செய்தத.

இரு அணிகளும் முதல் போட்டியில் தோல்வியை தழுவியிருந்த நிலையில்

பெர்த் மைதானத்தில் நடந்த போட்டியில் அவுஸ்திரேலியா-இலங்கை இரு அணிகளும் முதல் வெற்றியை பெறும் முனைப்போடு மோதின.

நாணய சுழற்சியில் வென்ற இலங்கை அணி முதலில் துடுப்பெடுத்தாடியது. 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 122 ஓட்டங்கள் எடுத்தது. அதிகபட்சடமாக கேப்டன் ஜெயங்கனி 50 ஓட்டங்கள் எடுத்தார்.

123 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய அவுஸ்திரேலிய அணி, கடைசி ஓவரில் 5 விக்கெட் இழந்த நிலையில் வெற்றி இலக்கை எட்டி முதல் வெற்றியை பதிவு செய்தது.

ஹேய்னஸ் 60 ஓட்டங்களும், கேப்டன் லான்னிங் 41 ஓட்டங்களும் எடுத்து அவுஸ்திரேலிய வெற்றிக்கு உறுதுணையாக இருந்தனர்.

இதன் மூலம் இலங்கை மகளிர் அணி விளையாடிய இரண்டு குரூப் போட்டிகளிலும் தோல்வியடைந்து ஐந்து அணிகள் கொண்ட புள்ளிப்பட்டியலில் 4வது இடத்தில் உள்ளது.

5வது இடத்தில் உள்ள வங்கதேச அணி இன்னும் ஒரு போட்டியில் கூட விளையாடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.