தமிழகத்தின் தருமபுரி மாவட்டத்தில் உள்ள பொம்மிடி இரயில்வே நிலையத்திற்கும் – புட்டிரெட்டிபட்டி இரயில் நிலையத்திற்கு இடையே தாண்டவள பகுதியில் நேற்று முன்தினத்தின் போது 40 வயது மதிக்கும் நபரின் ஆண் சடலம் இருந்துள்ளது. இந்த சடலம் மார்பு பகுதியில் கத்தியால் குத்தப்பட்ட காயத்துடனும், கை மற்றும் கால்கள் துண்டான நிலையிலும் இருந்துள்ளது.
இதனை கண்ட காவல் துறையினர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த நிலையில், இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். இந்த விசாரணையில், பிணமாக இருந்தவர் மாரண்டஅல்லி கிராமத்தை சார்ந்த விவசாயி பழனி (வயது 45) என்பதும், இவரது மனைவி ராதா (வயது 36) என்பதும் தெரியவந்துள்ளது. இவர்கள் இருவருக்கும் மகன் மற்றும் மகள் உள்ளார்.
இந்த நிலையில், கடந்த அக்டோபர் மாதத்தின் போது இரவு நேரத்தில் ராதா தனது கள்ளக்காதலன் ஆறுமுகம் என்பவருடன் தோட்டத்தில் உல்லாசமாக இருந்துள்ளார். இவர்கள் உல்லாசமாக இருந்த நிலையில், இதனை காட்டுப்பன்றி என்று நினைத்த இப்பகுதியை சார்ந்த சண்முகம் மற்றும் சின்னசாமி ஆகியோர் துப்பாக்கியால் சுட்டுள்ளனர். இந்த நேரத்தில் ஆறுமுகம் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியாகியுள்ளார்.
குண்டடிபட்டு ராதா மயக்கமடையவே, ராதா மற்றும் சின்னசாமி, சண்முகம் ஆகியோர் ஒன்று சேர்ந்து ஆறுமுகத்தின் சடலத்தை தண்டவாளத்தில் வீசியது தெரியவந்துள்ளது. இதனையடுத்து சின்னசாமி மற்றும் சண்முகம் ஆகியோரை காவல் துறையினர் 10 ஆம் தேதியன்று கைது செய்துள்ள நிலையில், ராதாவை கைது செய்து சேலத்தில் உள்ள சிறையில் அடைத்துள்ளனர்.
இந்த சமயத்தில், ராதாவின் கணவரான பழனி கத்திக்குத்து காயத்தோடு கை மற்றும் கால்கள் துண்டான நிலையில், நேற்று முன்தினம் தண்டவாளத்தில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இவரை மர்ம நபர்கள் கொலை செய்யப்பட்டுள்ளது உறுதியான நிலையில், காவல் துறையினர் இது தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், பழிக்கு பலியாக கொலை நடைபெற்றதா? என்பது தொடர்பாகவும் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.