நான் சிரித்தால் படம் வெற்றியை தொடுமா? நேற்று வரை மொத்த வசூல்

நான் சிரித்தால் ஹிப்ஹாப் ஆதி நடிப்பில் சில வாரங்களுக்கு முன்பு வெளிவந்தது. இப்படம் ரசிகர்களிடம் கவலையான விமர்சனங்களை பெற்றது.

அப்படியிருந்தும் படத்திற்கு ஓப்பனிங் பிரமாண்டமாக இருந்தது, இந்நிலையில் நான் சிரித்தால் தற்போது வரை ரூ 14 கோடி வசூல் செய்துள்ளதாம்.

இன்னும் வெற்றிக்கு சில கோடிகள் தேவையாம், ஆனால், அடுத்தடுத்து படங்கள் ரிலிஸானதால், இவை எந்த தொகையை எட்டுமா என்பது கேள்விகுறியாகியுள்ளது.

ஆனாலும், இந்த வாரம் பெரிய படங்கள் எதுவும் வராததால், கொஞ்சம் வசூல் வரும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.

ஹிப்ஹாப் ஆதி நடிப்பில் மீசைய முறுக்கு மற்றும் நட்பே துணை செம்ம ஹிட் அடிக்க, ஆதி ஹாட்ரிக் அடிப்பாரா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.