சன்னி லியோனின் பதைபதைக்க வைக்கும் வீடியோ காட்சி!

பார்ன் ஸ்டாராக இருந்து, அதன் பின்னர் பாலிவுட்டில் திரைப்பட நடிகையாக அறிமுகமானவர், நடிகை சன்னிலியோன். ஜிஸ்ம் 2 படத்திற்கு பிறகு ராகினி எம்எம்எஸ் 2 என்ற படத்தில் அவர் கதாநாயகியாகவும், சில படங்களில் ஐட்டம் டான்ஸ் ஆடியும் பாலிவுட் ரசிகர்களை கவர்ந்து வருகிறார்.

இவர் தமிழில் சில பாடல்களுக்கு நடனமாடியிருக்கின்றார். இவர்க்கு உலகெங்கும் ரசிகர் கூட்டம் இருக்கின்றது. இந்நிலையில், தற்போது அவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தோலை உரிப்பது போல மேக்கப் போடும் வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கின்றார்.

இந்த வீடியோவானது தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவிற்கு மேல் விலங்குகளை நாம் துன்புறுத்தக்கூடாது, மேலும், அவைகளை துன்புறுத்தும் பொருட்களை நாம் பயன்படுத்தக் கூடாது. நாம் செய்த குற்றங்களுக்கு விலங்குகள் குற்றவாளியாக கூடாது. என்று எழுதி இருக்கின்றார்.


தமிழ் சினிமாவில் வீரமாதேவி என்ற படத்தில் சன்னி லியோன் நடிக்க இருக்கிறார். ஏப்ரல் மாதத்தில் இதற்கான படப்பிடிப்பு நிறைவேற போவதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றது. அவர் மற்றவர்களை சிரிக்க வைக்கும் காமெடி படங்களில் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.