சினிமாவில் மீ டூ என்ற டேக் மூலம் கடந்த வருடம் முதல் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. இதில் ஹாலிவுட் சினிமாவை சேர்ந்த பிரபல தயாரிப்பாளர் ஹார்வி வைன்ஸ்டன் மீது பல பெண்கள் பாலியல் புகார்களை கூறி வந்தார்கள்.
கடந்த 2006 ல் பட தயாரிப்பு பெண் உதவியாளரை அவர் அவர் பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாகவும், 2013ல் நடிகை ஒருவரை அவர் பாலியல் வன்கொடுமை செய்ததாக குற்றம் சாட்டப்பட்டு வழக்கு பதியப்பட்டு கடந்த திங்கள் கிழமை விசாரணைக்கு வந்தது.
இதில் ஹார்விக்கு எதிரான தீவிர குற்றச்சாட்டுகளில் பெரும்பான்மையான நிரூபிக்கப்படவில்லை என்றும், பாதிக்கப்பட்டவர்களின் வாக்குமூலங்கள் அடிப்படையில் ஹார்வி குற்றவாளி என நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
இவ்வழக்கில் அவருக்கு தண்டனையாக ஆயுள் சிறை விதிகப்பட வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது…