ஸ்மார்ட்போன் போதைப் பழக்கத்தைப் போலவே ஆபத்தானது.!!

நமது வாழ்க்கை டிஜிட்டல் மற்றும் ஸ்மார்ட்போன் நட்பாக மாறிவிட்டது என்று நாம் அனைவரும் சொல்ல விரும்புவதைப் போலவே, எங்கள் தொலைபேசிகளும் நமக்கு ஒரு வகையான போதைப்பொருளாக மாறிவிட்டன.

நாம் காலையில் எழுந்த தருணத்திலிருந்து ஸ்மார்ட்போன்களை பயன்படுத்தி வருகின்றமை ஆரோக்கியமற்றதாக மாறி வருகின்றன.

இதேவேளை, விஞ்ஞானிகள் இப்போது ஸ்மார்ட்போன் பாவனை போதைப் பழக்கத்தைப் போலவே ஆபத்தானதாக இருக்கலாம் என்று கூறுகிறார்கள்.

இவ் ஆய்விற்கு ஹைடெல்பெர்க் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ஜெர்மன் பேராசிரியர்கள் 48 பேரின் மூளை எம்ஆர்ஐ ஸ்கேன்களை ஒப்பிட்டனர், அவர்களில் 22 பேர் தொலைபேசிகளுக்கு அடிமையாகியிருந்தனர.

ஸ்மார்ட்போன் பாவனையால் பாதிக்கப்படுபவர்களின் மூளையின் அளவு மற்றும் அடர்த்தியில் மாற்றம் காணப்படுகின்றமை பகுப்பாய்வு மூலம் கண்டறியப்பட்டுள்ளது.

மேலதிக ஆய்வில், மூளையின் கட்டமைப்பில் ஏற்படும் மாற்றங்கள் போதைப்பொருள் மற்றும் போதைப் பழக்கத்தால் பாதிக்கப்படுபவர்களில் காணப்பட்டதைப் போலவே இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.