மருத்துவ துறை வரலாற்றில் முதல் முறையாக செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்ட ஆன்ட்டிபயாட்டிக்

மருத்துவ துறை வரலாற்றில் முதல் முறையாக செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை பயன்படுத்தி ஆன்டிபயாடிக் மாத்திரையினை உருவாக்கி அசத்தியுள்ளனர் விஞ்ஞானிகள்.

இம் மாத்திரையானது 35 வரையான பாக்டீரியாக்களை கொல்லக்கூடியது என விஞ்ஞானிகள் குழுவினர் குறிப்பிட்டுள்ளனர்.

அத்துடன் இது 100 மில்லியன் வரையான இரசாயனக் கலவைகளை ஆய்வு செய்யக் கூடிய வகையில் மிகவும் வலிமையான செய்நிரலை பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ளது.

ஆன்டிபயாடிக் எதிர்ப்பு நோய்த்தொற்றுகள் சமீபத்திய ஆண்டுகளில் அதிகரித்துள்ளன.

2017 மற்றும் 2018 க்கு இடையில் இங்கிலாந்தில் 9% அதிகரித்து, கிட்டத்தட்ட 61,000 ஆக உயர்ந்துள்ளது.