61 வயதாகும் பெண்ணிற்கு சிறுநீர் கழிப்பதில் ஆல்கஹால் வெளியேறியதால் பரிசோதனை செய்த மருத்துவர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
அமெரிக்காவில் உள்ள பென்சில்வேனியாவில் 61 வயது பெண் ஒருவர் கல்லீரல் அலர்ஜி நோயின் காரணமாக பாதிக்கப்பட்டுள்ளார். இதனால் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்ய மருத்துவரை அணுகியுள்ளார்.
இதையடுத்து, மருத்துவர்கள் இவரின் சிறுநீரை பரிசோதனை செய்துள்ளனர். அப்போது இவர் மது அருந்திவிட்டு வந்துள்ளதாக நினைத்துள்ளனர். இவரின் உடலில் இருந்து வெளியேறிய சிறுநீரும் ஆல்கஹால் தன்மையை கொண்டிருந்தது.
மேலும், இந்த பெண் அதிகளவு மதுவிற்கு அடிமையானவர் என மருத்துவர்கள் குற்றம் சாட்டிய நிலையில், உடனே இந்த பெண் அதை மறுத்துள்ளார். இதனையடுத்து மருத்துவர்கள் மேற்கொண்ட தீவிர சோதனையில் பெரும் அதிர்ச்சியும், ஆச்சரியமும் காத்திருந்துள்ளது.
அப்போது மேலும் அவரிம் உடலை சோதனை செய்ததில், இவர் சர்க்கரை சார்ந்த உணவுகளை உண்ட பின்னர், இவரது சிறுநீரக பையில் இருக்கும் பூஞ்சை காளானின் காரணமாக சர்க்கரை ஆல்கஹாலாக மாறியுள்ளது. இதனால் இவர் சிறுநீர் கழிக்கும் நேரத்தில் ஆல்கஹால் வெளியேறியுள்ளது என கண்டறிந்துள்ளனர்.
அதன் பின்னர் பூஞ்சை காளானை அளிப்பதற்கு தேவையான மருந்துகள் வழங்கப்பட்டது. இவரை தவறாக புரிந்து கொண்ட மருத்துவர்கள் வருத்தம் பெண்ணிடம் மன்னிப்பு கேட்டுள்ளனர். இந்த விஷயம் குறித்து பிற மருத்துவர்களுக்கும் தெரியப்படுத்தி அறிவுறுத்தியுள்ளனர்.