நியூயார்க் (ராய்ட்டர்ஸ்) – ஹார்வி வெய்ன்ஸ்டீன் என்னும் பிரபல ஹாலிவுட் டைரக்டர் ஒருவர் மீது பிரபலமான நடிகைகள் உட்பட மொத்தம் 80 க்கும் மேலான பெண்கள் மீ டூ வில் பாலியல் புகார் தெரிவித்திருக்கிறார்களா. இதை தொடர்ந்து, நடிகை அன்னபெல்லா சியோரா அவர் மீது, மேக் அப் ரூமில் தன் தலைக்கு பின்னால் கைகளை பிடித்து கட்டிவிட்டு, 25 ஆண்டுகளுக்கு முன்பு பாலியல் பலாத்காரம் செய்ததாக வியாழக்கிழமை நீதிபதிகள் முன்பு சாட்சியம் அளித்திருந்தார்.
அந்த வகையில், முன்னாள் ஹாலிவுட் தயாரிப்பாளரும் இயக்குனருமான வெய்ன்ஸ்டின் மீது நடந்த பாலியல் குற்றச்சாட்டு விசாரணையின் பொது இதனை தெரிவித்தார். அவரிடம் இருந்து தப்பிக்க முயன்ற போது, என்னை மீறி அவர் என்னுடன் உடலுறவு கொண்டார். மேலும், எனது கைகள் கட்டிருப்பதால் என்னால் அவரிடம் சண்டையிட முடியவில்லை, என்று அவர் ஏழு ஆண்கள் மற்றும் ஐந்து பெண்களைக் கொண்ட நியூயார்க் நடுவர் மன்றத்திடம் தெரிவித்தார்.
கோர்ட் மேஜையில் உட்கார்ந்திருந்த வெய்ன்ஸ்டீன், விசாரணையின் போது குறிப்புகளை எடுத்தார். 67 வயதான வெய்ன்ஸ்டீன், மிமி ஹேலி மற்றும் ஜெசிகா மான் ஆகிய இரு பெண்களை பலாத்காரம் செய்த குற்றச்சாட்டில் தான் குற்றவாளி அல்ல என்றும், நடிகைகளுடனான தனது பாலியல் உறவுகள் அனைத்தும் அவர்கள் சம்மதத்துடன்தான் நடந்தது என்று அவர் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், அவர் கைது செய்யப்பட்டு, ரைக்கர்ஸ் தீவு சிறைக்கு அழைத்து சென்று அடைக்கப்பட்டார். இதை தொடர்ந்து வருகின்ற, 11 ஆம் தேதி தண்டனை விவரம் வெளியிடப்படும் வரை, அந்த சிறையில் அடைத்து வைக்கப்பட்டிருப்பார் என்று கூறப்படுகிறது.
இந்த வழக்கில் அவருக்கு 25 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படலாம் என கூறப்படுகிறது. இந்த குறித்து நடிகை ரோஸ் மெக்கோவன் கூறுகையில், இது ஒரு சிறந்த தீர்ப்பு, மேலும் இதில் பாதிக்கப்பட்ட வர்களுக்கு அவர்களின் குரல்கள் கேட்கப்படும் என்ற நம்பிக்கையை கொடுத்துள்ளதாக தெரிவித்துள்ளார்.