பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மிகவும் பிரபலமானவர் தான் இலங்கையைச் சேர்ந்த தர்ஷன். பிக்பாஸ் நிகழ்ச்சியினை விட்டு வெளியேறும் போது ரசிகர்கள் இவருக்காக கண்ணீர் சிந்தினர். அந்த அளவிற்கு ரசிகர்கள் மனதில் இடம்பிடித்தார்.
தற்போது பிரபல நடிகையான சனம் ஷெட்டியுடன் நிச்சயதார்த்தம் செய்து காதல் பிரச்சினையில் சிக்கி வெளியே வந்த நிலையில், சமீபத்தில் சாண்டியின் ஸ்டுடியோ விழா ஒன்றில் கலந்து கொண்டார். சில பிக்பாஸ் பிரபலங்களுடன் ஷெரினும் கலந்து கொண்டிருந்தார்.
இந்நிலையில் தர்ஷன் தனது புது கெட்டப் என்று புகைப்படம் ஒன்றினை பதிவிட்டுள்ளார். இப்புகைப்படத்தினை அவதானித்த சிலர் பாராட்டி வருகின்றனர். ஆனால் வேறு சிலரோ திட்டித் தீர்த்து வருகின்றனர். குறித்த புகைப்படத்தினையும் அதற்கு எதிராக வந்த கருத்துக்களையும் தற்போது காணலாம்.
View this post on Instagram