நடிகை கனிகா 2002ம் ஆண்டு வெளியான பைவ் ஸ்டார் படம் மூலம் அறிமுகமானார் . இவர் தமிழில் தொடர்ந்து எதிரி, ஆட்டோகிராப் , வரலாறு போன்ற திரைப்படங்களிலும் நடித்திருந்தார்.
இவர் மலையாளத்தில் பழச்சிராஜா, துரோணா , ஒரிசா , ருத்ர சிம்மாசனம் , அப்ரஹாமின்றே சந்நிதிகள், பவுட்டியூடே நாமத்தில், மாமாங்கம் போன்ற படங்களில் நடித்துள்ளார்.
சமீப காலமாக நீச்சல் உடையில் மற்றும் கவர்ச்சி உடைகளில் ரசிகர்களின் கண்களுக்கு கவர்ச்சி விருந்துவைத்துக்கொண்டிருக்கும் இவர் தற்போது, ” அனுமதி வேண்டியும், ஏற்றுக்கொள்ள வேண்டியும் எதிர்பார்க்காதீர்கள் நீங்கள் நீங்களாக இருக்கங்கள். சந்தேகத்திற்கு இடமே இல்லாமல் நீங்கள் நீங்களாகவே இருங்கள் ” என கூறியுள்ளார்.