விஜய் டிவியில் ஒளிபரப்பான கலக்கப்போவது யாரு என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தனது நகைச்சுவையாலும், உடல் பாவனைகளாலும் மக்களின் மனதை கவர்ந்தவர் பாலா. இவர் இந்த நிகழ்ச்சியில் இறுதி வரை சென்று முதல் பரிசையும் தட்டி சென்றார்.
இதையடுத்து, குக் வித் கோமாளி என்ற சமையல் நிகழ்ச்சியில் கோமாளியாக தனது கதாபாத்திரத்தின் மூலம் மக்கள் மத்தியில் மேலும் பிரபலமானார்.
இந்நிலையில், தற்போது குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிக்பாஸ் வனிதா அவர்கள் பாலாவுக்கு வெள்ளிதிரையில் நடிப்பதற்கான வாய்ப்பை ஏற்ப்படுத்தி கொடுத்திருக்கிறார்.
அதாவது வெள்ள காக்கா மஞ்ச குருவி என்ற படத்தில் தம்பி என்ற கதாபாத்திரத்தில் நடிக்க பாலா வேணும் என்று இயக்குனரிடம் வனிதா கேட்ட போது இயக்குனரும் அதற்கு ஒப்பு கொண்டுள்ளார் என்றும் எனவே பாலாவை இனி வெள்ளித்திரையிலும் பார்க்கலாம் என்று வனிதா கூறியுள்ளார்.