தமிழகத்தின் மதுரை மாவட்டத்தில் உள்ள குலமங்கலம் ஏ.டி காலனி பகுதியை சார்ந்தவர் தெய்வேந்திரன். இவர் கூலிவேலை செய்து வரும் நிலையில், இவருக்கு மூன்று மகன்கள் உள்ளனர். தெய்வேந்திரனுக்கு கிரிக்கெட் மீது அதிகளவு ஆர்வம் இருந்ததால், தனது மூன்றாவது மகனுக்கு சேவாக் சென்று பெயர் சூட்டியுள்ளார்.
இவரது மூன்றாவது மகனிற்கு 17 வயதாகும் நிலையில், அங்குள்ள ஆலங்குளம் பகுதியில் இருசக்கர வாகனம் பழுதுநீக்கம் செய்யும் நபராக பணியாற்றி வந்துள்ளார். இந்த நிலையில், சேவாக் அப்பகுதியை சார்ந்த 20 வயது பெண்மணியை ஒருதலைப்பட்சமாக காதலித்து வந்துள்ளார்.
இவர் பெண்ணிடம் தனது காதலை கூறிய நிலையில், இது தொடர்பாக பெண் தனது பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். இதனையடுத்து பெண்ணின் பெற்றோர்கள் சேவாக்கை கண்டித்த நிலையில், வயதை ஒரு பொருட்டாக ஏற்காது காதலில் இறுதியாக இருந்து வந்துள்ளார்.
இந்த நேரத்தில், பெண்ணிற்கு திருமண நிச்சயதார்த்தம் நேற்று முன்தினத்தின் போது நடைபெற்று முடிந்துள்ளது. இதனை அறிந்த சேவாக் மனஉளைச்சலுக்கு உள்ளாகியிருந்த நிலையில், பெண்ணையும் சந்தித்து நீ இல்லாமல் நானில்லை என்று கூறிவிட்டு சென்றுள்ளார்.
பின்னர் வீட்டில் இருந்து சுமார் 12 மணியளவில் தனது இருசக்கர வாகனத்தை எடுத்து சென்ற சேவாக், வாகனத்தில் இருந்த பெட்ரோலை மதுபாட்டிலில் பிடித்து தன் மீது ஊற்றி தீவைத்து தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
மேலும், இவர் தனது மரண வாக்குமூலத்தில் ஒருதலைக்காதலால் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக தெரிவித்ததை அடுத்து, இது தொடர்பாக காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.