நடிகை நிவேதா தாமஸ் இயக்குனர் சமுத்திரக்கனி இயக்கத்தில் உருவான போராளி என்ற படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார்.
அதனை தொடர்ந்து இவர் தளபதி விஜயின் ஜில்லா படத்தில் தங்கையாக நடித்திருந்தார். இதனைத்தொடர்ந்து கமலின் பாபநாசம் திரைப்படத்தின் மகளாக நடித்திருந்தார். இவர் தெலுங்கு திரைப்படங்களிலும் கவனம் செலுத்தி வருகிறார்.
இந்நிலையில் இவர் சமீபத்தில் அளித்துள்ள பேட்டி ஒன்றில் கதாநாயகியாக நடித்துக் கொண்டு இன்னொருபுறம் நடிகர்களுக்கு மகளாகவும் நடிக்கிறீர்களே என்று கேட்கிறார்கள். எனக்கு வில்லியாக நடிக்கும் ஆசை இருக்கிறது. அந்த மாதிரி கதாபாத்திரத்தை பற்றி நிறைய நாட்கள் யோசித்திருக்கிறேன்.
நிவேதா என்றால் அழகான பெண்ணை நினைக்கின்றனர். அதே நிவேதா வில்லியாக வந்தால் ரசிகர்கள் எப்படி வரவேற்பார்கள் என்பதை பார்க்க ஆசையாக உள்ளது என தெரிவித்துள்ளார்.