”ஊதா கலரு ரிப்பன்” ஸ்ரீதிவ்யாவா இது?

வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தின் மூலம் ரசிகர்களின் மனதை கொள்ளையடித்தவர் ஸ்ரீதிவ்யா.

தெலுங்கில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி, பல தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார்.

பின்னர் 2010ம் ஆண்டு மனசார என்ற படத்தின் மூலம் தெலுங்கில் கதாநாயகியாக கால்பதித்து வருத்தப்படாத வாலிபர் சங்கம் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார்.

தொடர்ந்து ஜீவா, பென்சில், காக்கிசட்டை என பல படங்களில் நடித்தவருக்கு தற்போது வாய்ப்புகள் இல்லை.

கடந்த சில மாதங்களாக ஜிம்மில் கவனம் செலுத்தி வரும் ஸ்ரீதிவ்யா, அவ்வப்போது புகைப்படங்களையும் வெளியிடுவது வழக்கம்.

கருப்பு நிற உடையில் வெட்கப்புன்னகை சிந்தும் இவரது புகைப்படம் வைரலாகி வருகிறது.