பாரதிராஜா இயக்கத்தில் வெளிவந்த கிழக்கே போகும் ரயில் எனும் படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை ராதிகா சரத்குமார்.
இவர் வெள்ளித்திரையிலும் சரி சின்னத்திரையிலும் சரி பல வருடங்களாக கொடிகட்டி பறந்து கொண்டு இருக்கிறார். சமீபத்தில் கூட இவரின் சித்தி 2 சீரியல் ரசிகர்கள் மத்தியில் மிக பெரிய வரவேற்பை அடைந்தது.
ராதிகாவிற்கு நிரோஷா எனும் தங்கை ஒருவர் இருக்கிறார். இவரையும் பல படங்களில் நாம் கதாநாயகியாக பார்த்திருப்போம். இவர் அண்மையில் பேட்டி ஒன்றில் கலந்து கொண்டுள்ளார். இதில் பேசிய நிரோஷா, பல விஷயங்களை பகிர்ந்து கொண்டார். அதில் ஒன்றாக “நானும் என் அக்கா ராதிகாவும் ஒரு படத்தில் இணைந்து நடித்தோம். அந்த படத்தில் நான் ஒரு அரத்தான தங்கச்சி போன்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தேன். அக்கா ஒரு அமைதியான பெண் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்”.
மேலும் பேசிய இவர் “அப்போது ஒரு ஷாட்டில் ஐஸ்க்ரீமை ஸ்டைலாக எடுக்க வேண்டும், ஆனால் என்னால் அந்த ஷாட்டை பண்ண முடியவில்லை. நான் அக்காவிடம் போய் அதை கூறினேன். அவர் அதுக்கு, ’என்ன dash-க்கு நீ நடிக்க வந்த’ என்று அனைவரின் முன்னாள் திட்டினார். நான் அதற்கு பின்பு அந்த காட்சியை ஒரே டேக்கில் நடித்து முடித்தேன்” என்று வெளிப்படையாக கூறினார்.