கொரோனா வைரஸ் SARS ஐ விட 1000 மடங்கு மோசமானது: விஞ்ஞானிகள் எச்சரிக்கை

கொரோனா வைரஸ் SARS ஐ விட 1,000 மடங்கு அதிகமான தொற்றுநோயாக இருக்கக்கூடும் என விஞ்ஞானிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

COVID-19 இன் பரவல் 2002/3 இல் SARS வெடித்த அதே பாதையை பின்பற்றும் என்று நிபுணர்கள் ஆரம்பத்தில் கருதினர், ஏனெனில் வைரஸ்கள் மரபணு ரீதியாக கிட்டத்தட்ட ஒரே மாதிரியாக இருக்கின்றன.

ஆனால் மனித உடலில் உள்ள உயிரணுக்களுடன் இது பிணைக்கும் விதம் எச்.ஐ.வி மற்றும் எபோலா போன்ற மிகவும் ஆக்கிரோஷமான நோய்களுக்கு ஒத்ததாக இருப்பதை அவர்கள் தற்போது கண்டுபிடித்துள்ளனர்.

இது SARS ஐ விட ‘100 முதல் 1,000 மடங்கு’ மக்களைப் பாதிக்கும் திறனைக் கொண்டுள்ளது என்று வடக்கு சீனாவின் தியான்ஜினில் உள்ள நங்கை பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

SARS, அல்லது கடுமையான சுவாச நோய்க்குறி, உலகளவில் 8,000 பேரை பாதித்தது மற்றும் 2002 ஆம் ஆண்டில் மட்டும் 774 பேரைக் கொன்றது.

ஆனால் தற்போதைய கொரோனா வைரஸ் இரண்டு மாதங்களுக்குள்ளாக ஏற்கனவே கிட்டத்தட்ட 3,000 பேரைக் கொன்றது மற்றும் 82,000 நோயாளிகள் நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர் என விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.