நெற்றியில் குங்குமத்துடன் சனம் ஷெட்டி.. திடீரென திருமணமானதா……

விஜய் தொலைக்காட்சில் ஒளிபரபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் புகழின் உச்சிக்கு சென்றவர் தர்ஷன். அவருக்கு என்று ரசிகர்கள் ஆர்மி எல்லாம் தொடங்கி வேற லெவலில் பாப்புலர் ஆகி கொண்டு செல்கிறார். பிக் பாஸ் வீட்டிற்குள் தர்ஷன் மற்றும் ஷெரின் நெருக்கமானதைக் கண்டு அவரது காதலியான சனம் ஷெட்டி வெளியிலிருந்து புலம்பி கொண்டிருந்தார்.

பின்னர் தர்ஷன் வாழ்க்கையில் இனி நான் இல்லை என்று கூறிய அவர், திடீரென்று தர்ஷன் வெளியேறியதற்குக் காரணம் ஷெரின் தான் என்று கூறினார். இதை தொடர்ந்து, பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியேறிய பிறகு சனம் ரெட்டியை சந்தித்த தர்ஷன் காதலை உறுதி செய்யவில்லை என்று தெரிகிறது. இதனால் மனம் நொந்துபோன சனம் அடிக்கடி மறைமுகமாக தர்ஷனை திட்டியவாறு இருந்தார்.

சனம் தர்ஷன் மீது புகார் அளிக்க சென்னை காவல் ஆணையர் அலுவலகம் வந்து, நிச்சயதார்த்தம் செய்து விட்டு தர்ஷன் திருமணம் செய்ய மறுப்பதாக கூறி புகார் அளித்தார்.

இந்நிலையில் சனம் ஷெட்டி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நெற்றியில் குங்குமத்துடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.