காரைநகர் யாழ்ற்ரன் கல்லூரியின் மைதானத்தில் பாடசாலையின் வருடாந்த மெய்வல்லுனர் விழா!

காரைநகர் யாழ்ற்ரன் கல்லூரியின் வருடாந்த இல்ல மெய்வல்லுனர் விழா அண்மையில் பாடசாலை மைதானத்தில் பாடசாலையின் அதிபர் நயினை தி. மதிவதனன் தலைமையில் இடம்பெற்றது.

இந்நிகழ்வின் பிரதம விருந்தினராக தீவக வலயக்கல்விப்பணிப்பாளர் பொ. ரவிச்சந்திரன் மற்றும் பாரியார் கலந்துகொண்டதுடன் சிறப்பு விருந்தினராக தீவக வலய கணக்காளர் பரதன் மற்றும் பாடசாலையின் பழைய மாணவியும் இலண்டனில் வசிப்பவருமான கணக்காளர் திருமதி காந்திதேவி முருகதாஸன் மற்றும் காரைநகர் பிரதேச சபையின் உப தவிசாளர் க.பாலச்சந்திரன் ஆகியோரும் கலந்துகொண்டனர்.

நிகழ்வில் மைதான நிகழ்ச்சிகள், இடவேளை கலை நிகழ்ச்சிகள் என்பன இடம்பெற்றதுடன் வெற்றிபெற்ற மாணவர்களுக்கான பரிசில்களும் வெற்றிக்கோப்பைகளும் வழங்கி வைக்கப்பட்டன.

விபுலானந்தர் இல்லம் தொடர்ச்ச்சியாக இரண்டாவது ஆண்டாக முதலிடம் பெற்று வெற்றிக்கோப்பையை தனதாக்கிக் கொண்டது. விருந்தினர்களுடன் அதிபர், ஆசிரியர்கள், மாணவர்கள், பழைய மாணவர்கள், ஊரவர்கள் பொதுமக்கள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.