நமது வயிற்றில் வாழும் இந்த புழுக்கள் நிறைய வகைகளில் நம்மை தொந்தரவு செய்கிறது.
இதில் நிறைய வகைகளும் உள்ளன. நூல் புழுக்கள், உருளை புழுக்கள், சாட்டை புழுக்கள், ஜியார்டியா, கொக்கிப் புழுக்கள், நாடாப் புழுக்கள் போன்றவை காணப்படுகின்றன.
கெட்ட சுவாசம், வயிற்று போக்கு, கருவளையம்,அடிக்கடி பசி எடுத்தல், தலைவலி, அனிமியா போன்ற அறிகுறிகள் குடல் புழுக்களை இருப்பதை தெரியப்படுத்துகின்றன.
எனவே இந்த குடல் வாழ் புழுக்களை அழிக்க 6 மாதங்களுக்கு ஒரு முறை மாத்திரை எடுத்துக் கொள்ள வேண்டியது அவசியமானதாகும்.
அந்தவகையில் தற்போது இதை எளிய முறையில் வெளியேற்றும் சில கிராமத்து வைத்தியங்கள் என்னென்ன என்பதை பற்றி பார்ப்போம்.
- ஒரு டம்ளர் வெதுவெதுப்பான பாலில், 1 டேபிள் ஸ்பூன் பழுக்காத பப்பாளி கூழ் மற்றும் 1 டீஸ்பூன் தேன் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும். பின் பருக வேண்டும். இப்படி தினமும் என ஒரு வாரம் காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் குடித்தால், ஒரு நல்ல மாற்றத்தைக் காணலாம்.
- ஒரு டம்ளர் மோரில் ஒரு டீஸ்பூன் மஞ்சள் தூள் சேர்த்து கலந்து, தினமும் குடிக்க வேண்டும். இதனால் உடலில் இருந்து புழுக்கள் வெளியேறிவிடும்.
- 1 டேபிள் ஸ்பூன் வறுத்த பூசணி விதைகளை 1/2 கப் நீர் மற்றும் தேங்காய் பாலில் சேர்த்து கலந்து, ஒரு வாரத்திற்கு தினமும் காலையில் வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும்.
- வேப்பிலையை நன்கு மென்மையாக அரைத்து பேஸ்ட் செய்து, தினமும் காலையில் வெறும் வயிற்றில், 1/2 டீஸ்பூன் வேப்பிலை பேஸ்ட்டை ஒரு டம்ளர் நீரில் கலந்து குடிக்க வேண்டும். இப்படி சில நாட்கள் குடித்து வந்தால், உடலில் இருந்து புழுக்கள் அனைத்து வெளியேறிவிடும்.
- ஒரு வாரத்திற்கு பச்சை பூண்டு அல்லது பூண்டு டீயை தினமும் காலையில் வெறும் வயிற்றில் உட்கொள்ள வேண்டும்.
- ஒரு டேபிள் ஸ்பூன் துருவிய தேங்காயை காலை உணவின் போது உட்கொள்ள வேண்டும். 3 மணிநேரம் கழித்து, 1 டம்ளர் வெதுவெதுப்பான பாலில் 2 டேபிள் ஸ்பூன் விளக்கெண்ணெய் சேர்த்து கலந்து குடிக்க வேண்டும். இப்படி ஒரு வாரத்திற்கு செய்து வந்தால், உடலில் உள்ள அனைத்து வகையான புழுக்களும் வெளியேறிவிடும்.
- ஒரு கப் நீரில் 2 அல்லது 3 கிராம்பைப் போட்டு கொதிக்க வைத்து இறக்கி வடிகட்டி, தினமும் 3-4 முறை என ஒரு வாரம் தொடர்ந்து குடிக்க வேண்டும்.
- உடலில் புழுக்கள் சேராமல் இருக்க நினைத்தால், தினமும் ஒரு கேரட்டை சாப்பிடும் பழக்கத்தைக் கொள்ளுங்கள்.
- ஒரு டேபிள் ஸ்பூன் வெல்லத்தை காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட வேண்டும். 15-20 நிமிடங்கள் கழித்து, 1/2 டீஸ்பூன் ஓமத்தை வாயில் போட்டு, 1 டம்ளர் நீரைக் குடிக்க வேண்டும். இப்படி ஒரு 2 வாரங்கள் தொடர்ந்து செய்து வந்தால், குடலில் உள்ள புழுக்கள் முழுமையாக வெளியேறிவிடும்.
- ஒரு டம்ளர் வெதுவெதுப்பான நீரில் 1 டேபிள் ஸ்பூன் ஆப்பிள் சீடர் வினிகர் சேர்த்து கலந்து, தினமும் குடிக்க வேண்டும். இப்படி ஒரு வாரம் தொடர்ந்து குடித்து வந்தால், குடலில் உள்ள புழுக்கள் அழிந்து வெளியேறி, உடல் சுத்தமாக இருக்கும்.