ஆசிரியரால் மாணவிக்கு ஏற்பட்ட விபரீதம்.!

மகாராஷ்டிரா மாநிலத்தில் பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவி தற்கொலை செய்து கொள்ள பள்ளி ஆசிரியர் ஒருவர் உதவி செய்துள்ள சம்பவம் நடந்துள்ளது.

அந்த தனியார் உயர்நிலைப்பள்ளியில் பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவி பொதுத்தேர்வு எழுத விரும்பி இருக்கின்றார். மேலும், முதல் இடத்தை எப்படியாவது பிடித்து விட வேண்டும் என்ற லட்சியத்தோடு அவர் படைத்துள்ளார். இருப்பினும், அவருக்கு குழப்பம் இருந்துள்ளது.

தன்னால் சரியாக எழுத முடியாதோ என்ற சந்தேகம் அவருக்கு தோன்றியிருக்கிறது. இதன் காரணமாக தன்னுடைய லட்சியம் நிறைவேராது. என்று பயந்த அந்த மாணவி தன்னுடைய ஆசிரியரிடம் தனக்கு ஒரு பாட்டில் பூச்சிக்கொல்லி மருந்து வாங்கி தர சொல்லி கேட்டு இருக்கின்றார்

அந்த மாணவி கேட்டதன் காரணமாக பள்ளி ஆசிரியர் ஒரு பாட்டிலை வாங்கி தண்ணீரை கலந்து அவரிடம் கொடுத்துள்ளார். பூச்சிக்கொல்லி மருந்தை குடித்த அந்த மாணவி மயக்கம் அடைந்துள்ளார் .அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருக்கிறார். இருப்பினும் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார் இருக்கின்றார்.

இதுகுறித்து காவல்துறையினர் அந்த ஆசிரியரை பிடித்து விசாரித்ததில் உண்மை வெளிவந்து இருக்கின்றது. அவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.