லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் மற்றும் விஜய் சேதுபதி நடித்து வரும் படம் மாஸ்டர். இப்படத்தில் விஜய்க்கு வில்லனாக விஜய் சேதுபதி நடித்து வருகிறார்.
விஜய்யுடன் இப்படத்தில் முதன் முறையாக நடிகை மாளவிகா மோகனன் ஜோடியாக நடித்து வருகிறார். மேலும் ஆண்ட்ரியா, சாந்தனு, அர்ஜுன் தாஸ், கௌரி கிஷன் உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்து வருகிறார்கள்.
சமீபத்தில் இப்படத்தை குறித்து விருது விழா ஒன்றில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் புதிதாக ஒரு விஷயத்தை கூறியிருந்தார். ஆம் இப்படத்தில் விஜய் மற்றும் விஜய் சேதுபதி இணைந்து வரும் எல்லா சீனும் Fire-ஆ இருக்கும் என்று தெரிவித்திருந்தார்.
மேலும் இப்படத்தின் படப்பிடிப்பு தளத்தில் விஜய்க்கு தனது ஸ்டைலில் விஜய் சேதுபதி முத்தம் கொடுத்தாக கூறி சில தகவல்கள் வெளியானது.
இந்நிலையில் தற்போது இப்படத்தின் படப்பிடிப்பு தளத்தில் படப்பிடிப்பு முடியும் தருணத்தில் விஜய்க்கு, விஜய் சேதுபதி முத்தம் கொடுத்த புகைப்படத்தை வெளியிட்டுள்ளனர்.
இதோ அந்த புகைப்படம்…
Friends ah ninna powerful maapi ?❤#Thalapathy and #MakkalSelvan wrapping up the shoot in style.
The countdown for celebration to kickstart. . . ?#MasterShootWrap pic.twitter.com/ZZ6wGg46VP— XB Film Creators (@XBFilmCreators) February 29, 2020