யாழ்ப்பாணம் மல்லாகம் பகுதியில் கடந்த இரவு இடம்பெற்ற வாள்வெட்டு வன்முறைச் சம்பவத்திற்கான காரணம் வெளியாகியுள்ளது.
அண்மையில் இருவர் காதல் திருமணம் புரிந்துகொண்டதாகவும் பெண் வீட்டார் பெண்ணை பிரித்துவந்ததாகவும் தெரியவருகிறது.
இதனை அடுத்தே ஆணின் நெருக்கத்துக்குரியவர்கள் என்று கருதப்படுபவர்களே தாக்குதலில் ஈடுபட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
மல்லாகம் வங்களாவடி பகுதியில் குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.