பாராளுமன்றத்தில் அதிமுக பயன்படுத்திய பெரிய அறையை தற்போது திமுகவுக்கு மத்திய அரசு ஒதுக்கப்பட்டுள்ளது.
2014 ஆம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் 37 இடங்களில் அதிமுக வெற்றி பெற்றது. மேலும் மாநிலங்களவையிலும் அதிமுக குறிப்பிட்ட அளவு எம்பிகளை கொண்டிருந்ததால் பாராளுமன்றத்தில் கீழ்தளத்தில் உள்ள மிகப்பெரிய அதிமுகவுக்கு ஒதுக்கப்பட்டது.
சமீபத்தில் நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் அதிமுக ஒரே ஒரு இடத்தில் வெற்றி பெற்றது. அதனால் அந்த அறையை தற்போது அதிக எம்பிகள் உள்ள திமுகவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. பட்ஜெட் கூட்டத் தொடரின் 2வது அமர்வு நேற்று தொடங்கிய நிலையில் அந்த அறையைத் திமுகவிற்கு ஒதுக்கப்பட்டுள்ளது.
திமுக எம்பிக்கள் அனைவரும் அந்த அறையில் ஆலோசனை நடத்துகின்றனர். அந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.