தமிழ் திரைத்துறையில், ஒவ்வொரு வாரமும் பல படங்கள் ரிலீசாகி வருகிறது. ஆனால், வெளிவரும் அனைத்து படங்களும் மக்களிடம் வரவேற்பை பெறுவது என்பது படத்தின் கதையை பொறுத்து தான் அமையும். அப்படி ஒருசில படம் மக்கள் மனதில் நிற்கும். சில படங்கள் வெளிவந்ததே தெரியாமல் போய்விடும்.
அந்த வகையில், கடந்த வாரம் திரௌபதி, கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால், என்று இன்னும் பல படங்கள் ரிலீசாகின. இவைகளில் கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் திரைப்படம் அதிக வசூல் பெற்று பாக்ஸ் ஆஃபிஸில் முதலிடத்தில் உள்ளது.
திரைக்கு வருமா என்று பலர் கேள்வியெழுப்பியபோதும், பல்வேறு தடைகளை கடந்து சர்ச்சைகளோடு வெளியாகிய அந்த படத்திற்கும் நல்ல வசூல் கிடைத்து இரண்டாம் இடத்தை பிடித்துள்ளது.
பாக்ஸ் ஆஃபிஸின் டாப் 5 லிஸ்ட் இதோ:
1. கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தல்.
2. திரௌபதி
3. ஓ மை கடவுளே
4. மாஃபியா
5. தி இன்விசிபிள் மேன்