மத்திய குற்றப்பிரிவு அலுவலகத்தில் கமலஹாசன்.!!

இயக்குனர் ஷங்கரின் இயக்கத்தில் நடிகர் கமலஹாசன் நடிக்கும் இந்தியன் 2 திரைப்படத்தின் படப்பிடிப்பு சென்னையை அடுத்த பூந்தமல்லியில் ஈவிபி சினிமா படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்தது.

கடந்த மாதம் 19 ஆம் தேதி  படப்பிடிப்புக்கு செட் அமைக்கும் பணியின் போது, கிரேன் அறுந்து விழுந்ததில் 3 ஊழியர்கள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர். அதேபோல இந்த விபத்தில்படுகாயம் அடைந்த 5 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த நிலையில், இந்தியன் 2 படப்பிடிப்பில் நடந்த விபத்து தொடர்பாக நடிகர் கமலஹாசனுக்கு போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர். மார்ச் 3ஆம் தேதி மத்திய குற்றப் பிரிவு அலுவலகத்தில் ஆஜராக கமலஹாசனுக்கு சம்மனில் அனுப்பப்பட்டது.

இந்த நிலையில், இந்தியன் 2 படப்பிடிப்பு விபத்தில் 3 பேர் உயிரிழந்த வழக்கில் மத்திய குற்றப் பிரிவு விசாரணைக்கு கமல்ஹாசன் ஆஜரானார். சென்னையில் உள்ள மத்திய குற்றப்பிரிவு போலீசார் அலுவலகத்தில் கமல்ஹாசனிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. ஏற்கனவே விபத்து தொடர்பாக இயக்குநர் ஷங்கரிடம் விசாரணை நடத்தியதை அடுத்து இன்று கமலிடம் விசாரணை.