நடிகர் சிம்பு மாநாடு திரைப்படத்தை தொடர்ந்து இயக்குனர் மிஷ்கின் இயக்கத்தில் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சித்திரம் பேசுதடி, சைக்கோ உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கிய மிஷ்கின் நடிகர் விஷாலை வைத்து துப்பறிவாளன் படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கிவந்தார்.
இந்த திரைப்படத்தின் முதற்காட்சிகள் லண்டனில் படமாக்கப்பட்டு வந்த நிலையில் விஷாலுடன் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக படத்தில் இருந்து விலகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் தற்போது சிம்புடன் இயக்குனர் மிஷ்கின் கைகோர்த்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.