இயக்குனர் ஹரி இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் உருவாகவுள்ள திரைப்படத்திற்கு “அருவா” என பெயரிடப்பட்டுள்ளது.
இதற்கு முன்னர் சூர்யா – ஹரி கூட்டணியில் சிங்கம் திரைப்படம் வெளியாகி இரசிகர்கள் இடையே மாபெரும் வரவேற்பை பெற்றது.
இந்நிலையில் சூர்யாவின் 39ஆவது திரைப்படமான இந்த திரைப்படத்திலும் அதே கூட்டணி இணைந்துள்ளதால் இரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
அத்துடன் இந்த திரைப்படத்திற்கு டி.இமான் இசையமைக்கவுள்ளார். சூர்யாவின் திரைப்படத்திற்கு இமான் இசையமைக்கும் முதல் திரைப்படம் இதுவாகும்.